அறிமுகம்

தமிழில் தொழில்நுட்பக் கட்டுரைகள் எழுதுவது ஒரு பொழுது போக்காகத் தொடங்கி, இன்று (2017) நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் மற்றும் 8 புத்தகங்கள் என்று வளர்ந்து வந்துள்ளது.

பல இணையப் பத்திரிக்கைகளில் வெளி வந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்த வலைப்பூ.

தமிழ் கற்ற இளைஞர்கள் எளிமையாகப் புரிந்து கொள்ளும்படி எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. உயர் தொழில்நுட்பம் என்றவுடன் ஏன் ஆங்கிலத்திற்குத் தாவ வேண்டும்? தாய்மொழியில் கற்பது,  புரிதலுக்கு மிகவும் முக்கியம். பல கட்டுரைகளில் இன்னும் அதிகமாக கற்பதற்கு சுட்டிகளையும் இணைத்துள்ளேன்.

எளிமையாகத் தொழில்நுட்பக் கட்டுரை எழுதுவது என்பது எளிமையான விஷயமல்ல. ஆழமாக ஆராய்ந்தாலே எளிமையாக எழுத முடியும் என்பது என் கருத்து.

இக்கட்டுரைகள் சில ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டிருந்தாலும், இவைப் பல ஆண்டுகளுக்கு  பயனுள்ள விஷயங்களாக இருக்கும் என்பது என் நம்பிக்கை.

நன்றி

ரவி நடராஜன்