செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – புதியதொரு எதிர்காலம் – பகுதி 18

எந்திரங்களைக் கண்டு அஞ்சுவது மனிதர்களுக்கு அழகல்ல. நாம் உருவாக்கும் எந்திரங்கள் நமக்கே தீங்கு விளைவிக்காமல் இருக்க நாம் தான் பொறுப்பு. எந்திரங்களோடு இன்றும் வாழ்கிறோம். என்ன, எதிர்காலத்தில், இன்னும் சற்று கூடுதலாக நம் வாழ்க்கையில் பங்களிப்போம். அவ்வளவுதான்.

இந்தப் பகுதியில், மூன்று புதிய செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடுகளை முன்வைக்கிறேன். இவை கல்வித்துறை,செய்தித் துறை மற்றும் இந்திய இசைத்துறையாகும்.

குறிப்பாக, என் பார்வையில் மனிதர்களால் அதிகம் புரிந்து கொள்ள முடியாத ஒரு இசை மேதை இளையராஜா. இவருடைய முக்கிய பங்களிப்புகளில் ஒன்று, இந்திய பண்ணிசையையும் , மேற்கத்திய பண்ணிசையையும் திறமையாக ஒன்றிணைப்பது. இதைச் சிலர் ஓரளவிற்கு செய்தாலும், இவரின் வல்லமை எவரிடமும் இல்லை. நல்ல வேளையாக ராஜா தன்னுடைய இசையை முழுவதும் மேற்கத்திய குறிப்புகளாய் எழுதுகிறார். ஒரு எந்திரத்தை, ராக வாரியாக ராஜாவின் harmony முறைகளைக் கற்பிக்க நாம் முயற்சிக்க வேண்டும். இதை நான் Deep Raja என்ற ஒரு ப்ராஜக்டாக செய்தால், இந்திய பண்ணிசை பரவ ஒரு பெரிய வாய்ப்பாக எதிர்காலத்தில் அமையும். அதாவது ஒரு மேற்கத்திய இசைக் கலைஞருக்கு ஒரு முக்கிய நுழைவாயிலாக Deep Raja உருவாக வேண்டும்.

செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – எதிர்கால வேலைகள் – பகுதி 17

இதுவரை நாம் பார்த்த காணொளிகளில், சற்று negative – வான காணொளி இது. இந்தக் காணொளியில், இரண்டு விஷயங்கள் நாம் பார்க்க உள்ளோம்.

முதலாவது, இன்னும் 15 -20 ஆண்டுகளில் எந்தெந்த வேலைகள் மறைய வாய்ப்புண்டு என்ற கசப்பான ஒரு ஆய்வுக் கட்டுரையின் அடிப்படையில் ஒரு அலசல். 15 -20 ஆண்டுகள் என்பது எவராலும் சரியாக கணிக்க முடியாத ஒரு கால அளவு. சற்று விவரமறிந்த கிளிஜோசியம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், இன்றைய இளைஞர்கள் தங்களை தயார் செய்து கொள்ள மிகவும் முக்கியம். எதிர்காலத்தில், ‘இதோ அபத்தமான ஒரு 2019 விடியோ’ என்று இதை எவராவது கிண்டல் செய்தால், அவசியம் மகிழ்ச்சி அடைபவன் நான். இந்த காணொளியில் உள்ள அத்தனை விஷயங்களும் பொய்யானால், மிகவும் சந்தோஷம்.

இதைப் பற்றி மேலும் விரிவாகப் படிக்க:

https://www.oxfordmartin.ox.ac.uk/downloads/academic/The_Future_of_Employment.pdf

ஏன் நாம் AI –ஐக் கண்டு அஞ்சுகிறோம்? நாம், ATMs, smartphones, Expedia, Microsoft Excel, Google search கண்டு பயப்படவில்லையே. இவை யாவும் பல வேலைகளை நீக்கிய technology தானே?

செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – சட்டப் பயன்பாடு – பகுதி 16

வழக்குகள் மனிதர்களால், காகிதமும் மற்றும் அறிவாலும் நிகழும் ஒரு துறை. செயற்கை நுண்ணறிவு இந்தத் துறையில் இன்று அதிகம் தாக்கம் இல்லாதது போலத் தோன்றினாலும், AI –யின் தாக்கம் அதிகமாகத் தெரியப் போகும் ஒரு துறை சட்டத் துறை.
எதிர்காலத்தில், தீர்ப்புகளை ரோபோக்கள் வழங்குமா? வழக்கறிஞர்கள் தேவையில்லாமல் போய் விடுவார்களா? சட்ட உதவியாளர்களின் கதி என்ன?
காகிதத்தில் மூழ்கிக் கிடக்கும் இந்தத் துறையை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் திருப்பிப் போடுமா? மக்களுக்கு தீர்வுகள் இன்றை விட சீக்கிரம் கிடைக்குமா?

மேலும் இத்துறையில் AI –யின் தாக்கம் பற்றித் தெரிந்து கொள்ள:
https://www.digitalistmag.com/digital-economy/2018/04/03/ai-is-disrupting-law-06030693

செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – ஒரு Recap மற்றும் HR -ல் AI – பகுதி 15

இதுவரை நாம் பார்த்த காணொளிகளின் நாம் முக்கியமாகப் பார்த்தது இரு விஷயங்கள். AI –யின் தாக்கங்கள் பெரும்பாலும் சில வேலைகளில் அதிகமாக உள்ளது

1. கணிமை வேலைகள் (computational jobs)
2. மொழி சார்ந்த வேலைகள் (language dependent jobs
3. கட்டுப்பாடு சார்ந்த வேலைகள் (control related jobs)

AI பெரும்பாலும் மூன்று நுட்பங்களைப் பயன்படுத்தி இந்தத் தாக்கத்தை உண்டாக்குகிறது:

1. மொழியறிதல் (Natural language processing)
2. படமறிதல் (Image processing)
3. குரலறிதல் (Voice and sound recognition/processing)

மனித வளத்துறையில் (Human Resources) ரோபோக்கள் மனிதர்களை நீக்கிவிடுமா? இனிமேல் வேலை வேண்டுமானால், ரோபோவுடன் நேர்காணலா?

மேலும் இத்துறையில் ரோபோக்களின் தாக்கத்தைப் பற்றி அறிந்து கொள்ள, சில சுட்டிகள்:

செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – இசைத் துறையில் AI – பகுதி 14

திரைப்படப் பின்னணி இசையை ஒரு ரோபோவால் உருவாக்க முடியுமா? ரோபோ இளையராஜா சாத்தியமா? மனித உணர்வுகள் எந்திரங்களுக்கு எவ்வளவு புரியும்? மகிழ்ச்சி, சோகம், விரக்தி, கோபம், போன்ற உணர்வுகளுக்கு தனித்தனியாக ஒரு லைப்ரரி இருந்தால், இசையமைப்பாளர் தேவையா?

எதிர்கால சிறு படங்கள், சின்ன பட்ஜட் விளம்பரங்கள், மற்றும் ஆவணப்படங்களுக்கு இசையமைப்பாளர் தேவையா? ரோபோக்கள் இவ்வகை வாய்ப்புகளை பறித்துக் கொள்ளுமா?

இன்றைய திறன்பேசிகள் (smartphones) காமிராக்களை தோற்கடித்தது போல இசையையும் தோற்கடித்து விடுமா?

செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – இசைத் துறையில் AI – பகுதி 13

இசை என்றவுடன் நம்முடைய கர்னாடக இசை, அல்லது நாட்டுப்புற இசை மற்றும் திரை இசை நம் மனதில் தோன்றி மறைவது இயற்கை. இசையை நாம் விடியோ விளையாட்டுடனோ, விளம்பரத்துடனோ சேர்ந்து சிந்திப்பதில்லை. ஆனால், உலகில் விடியோ விளையாட்டுக்கள், சினிமா, பாரம்பரிய இசையை விட அதிகமாகப் பயன்படுத்துகிறது. $1 –க்கு நாம் வாங்கும் சைனா பொமையும் வாசிப்பது பீத்தோவன்.

ஸிந்தஸைசர்கள், சினிமா இசையில் 40 ஆண்டுகளாக பயன்படுத்தப் படுகிறது. AWS கடந்த 25 ஆண்டுகளாக பல இசையமைப்பாளர்களாலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த எந்திரப் புரட்சி, பல இசைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தையும் குலைத்ததை நாம் பார்த்டு வந்துள்ளோம்.

கடந்த 40 வருட தொழில்நுட்பத் தாக்கத்தில், தப்பித்தவர்கள் இசையமைப்பாளர்கள். இன்றைய Deep Bach மற்றும் Project Majenta, இசையமைப்பாளர்களின் நிலையையும் கேள்விக்குறியாகி விடுமோ?

மேலும் இந்தத் தொழில்ண்ட்பத்தைப் பற்றி அறிந்து கொள்ள:

https://magenta.tensorflow.org/

செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – ஓவியத் துறையில் AI – பகுதி 12

ஒவியம் என்றவுடன் நமக்கு ரவிவர்மாவோ, சிற்பியோ நினைவுக்கு வர்வது இயற்கை. ஓவிய உலகில் கணினிகள் கடந்த 30 ஆண்டுகளாக பலவிதத்திலும் மனிதர்களுக்கு உதவி வருகின்றன. உதாரணத்திற்கு, வண்ணப்பட ஸ்டூடியோ எங்கிலும் பயன்படுத்தப்படும் மென்பொருள் Photoshop. இன்று மின்னணு வரைபடங்கள் இணையம் முழுவதும் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன.

மனித ஓவியரைப் போல, எந்திரங்களால் வரைய, மற்றும் வண்ணம் தீட்ட முடியுமா? இன்றைய எந்திரங்கள், மனித ஓவியரைக் காப்பியடிப்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை. மனிதர்களால், நினைத்து பார்க்க முடியாத புதிய வண்ணங்கள், கோணங்கள், வடிவங்களை உருவாக்குகின்றன.

எதிர்கால மனித ஓவியரின் வேலை என்னவாகும்? அதுவும், வியாபார ஓவியரின் நிலமை என்னவாகும்?

இந்தத் தொழில்நுட்பத்தின் தாக்கத்தை மேலும் அறிந்து கொள்ள:

https://www.youtube.com/watch?v=0qVOUD76JOg – TED talks

https://www.youtube.com/watch?v=uSUOdu_5MPc – TED Talks